மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சில கவிதைகளும்... சிக்கன நன்றியும்...


தற்கெடுத்தாலும்
குற்றம் சொல்லும் சுற்றம்
பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!

***

விடியலைத் தேடும்
பயணம்...
சோர்வாய் எரிந்தது
தெரு விளக்கு..!

***


ரம் நடுவிழா...
அமைச்சர் காருக்குப்பின்
ஊர்வலமாய் கார்கள்...
மாசுபட்டது காறறு...

***


கானகத்தில் மழை...
நனைந்த குருவிகளின்
சப்தத்தை கேலி
செய்தது மரங்கொத்தி
மரம் விழும் வரை..!

***


'ம்மா பசிக்குது'
அழுத குழந்தையை
அணைத்து அழுதாள்...
உடற்பசி அடங்கிய
திருப்தியில் உறங்கும்
கணவன்...

***


லையுடன் நிற்பவனை
அறியவில்லை...
ஓடும் நீரில்
துள்ளும் மீன்..!

-------------

நட்பே வணக்கம்...


எனக்கு 'இலக்கியத்தேனீ' என்ற விருதினை அளித்து சந்தோஷப்பட்ட முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், வலைமனையில் எனது தளத்தையும் அறிமுகம் செய்த அதீதம் இணைய இதழுக்கும் அதனை எனக்குத் தெரிவித்த திரு. எல்.கே மற்றும் நண்பர்களுக்கும், வலைச்சரத்தில் பலமுறை பலரால் அறிமுகமானாலும் ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அடையும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை... அந்த வகையில் சென்ற வாரம் என்னை அறிமுகம் செய்த சகோதரர் மாய உலகம் அவர்களுக்கும் உங்கள் அன்பின் முன்னால் என் நன்றி சிறியதுதான்... இருப்பினும் நன்றி மறப்பது நன்றல்ல என்பதால் நன்றி. (தனிப்பதிவாக சொல்ல ஆசைதான்... நேரமின்மை... பொறுத்துக் கொள்ளுங்கள் உறவுகளே...)


அலுவலகத்தில் எட்டு மணி நேர வேலைக்கான சம்பளத்தில் ஏறக்குறைய 15 மணி நேரப்பணி அதுவும் கணிப்பொறி முன்னால்...(சம்பளம் மட்டுமே... மற்ற சலுகைகள் இல்லை) என்ன செய்வது அடிமை வாழ்க்கை... எனவே மனவலியுடன் முதுகு வலியும் இம்சிக்கிறது. அதனால்தான் மனசு பொலிவிழந்து இருக்கிறது... விரைவில் மீண்டு வருகிறேன்...

-'பரிவை' சே.குமார்.

29 எண்ணங்கள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

கவிதைகள் நன்று. விரைவில் மீண்டு வாருங்கள். நிறைய எழுத வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

யாராவது தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள்.
இண்ட்லி பட்டன் தெரிவதில்லை... வாக்கு அளிக்க முடியவில்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள். எனக்கும் பட்டன் தெரிவதில்லை... என்ன காரணம் தெரிந்தவ்ர்கள் சொல்லுங்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை மிக அருமையா இருக்கு, சீக்கிரம் திரும்பி வாருங்கள்...

தினேஷ்குமார் சொன்னது…

கவிதை அருமை அண்ணே ...

வலிகள் எல்லாம் பறந்துபோகும் விரைவில் ...

தமிழ்மணத்தில் இணைச்சுட்டேன்

செங்கோவி சொன்னது…

முதல் கவிதை அருமை குமார்...


இவ்வளவு வேலைப்பளுவிற்கு இடையிலா எழுதுகிறீர்கள்..அடடா..நீங்கள் எப்போதாவது வந்தாலும், நாங்கள் எப்போதும் வருவோம் குமார்.நோ பிராப்ளம்.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கவிதைகள் ரொம்ப நல்லாருக்கு.. பூரண நலத்துடன் விரைவில் வாங்க..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

கவிதைகள் மிக அருமை.

தங்களின் மனவலி முதுகு வலி எல்லாம் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

காந்தி பனங்கூர் சொன்னது…

கவிதைகள் அனைத்தும் அருமைங்க. வாழ்த்துக்கள்.

ஆமினா சொன்னது…

பூரண நலத்துடன் மீண்டூவர வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
எதற்கெடுத்தாலும்
குற்றம் சொல்லும் சுற்றம்
பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!
////////


எவ்வளவு எதார்த்தமான கவிதை..
நியாமான வலி கவிதையில் மிளிர்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அத்தனையும் அமர்க்களம்...

வாழ்த்துக்கள்...

மகேந்திரன் சொன்னது…

அழகுக் குறுங்கவிதைகள்.
மனத்தைக் கவர்கிறது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகான ஹைக்கூக்கள் ... வாழ்த்துக்கள்

கோகுல் சொன்னது…

குறுங்கவிதைகளா இருந்தாலும்
"நறுக்"கவிதைகள்.
விரைவில் பொலிவு திரும்ப வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

அதிக வேலைபளூவுக்கு இடையில் அருமையான கவிதைகள் தரும் அனைத்து குறுங்கவிதைகளும் அருமை.. நலமுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்

ஆயிஷா சொன்னது…

கவிதைகள் மிக அருமை.
நலமுடன் திரும்பி வர வாழ்த்துக்கள்

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

இது தான் வாழ்க்கை எனும் போது எதார்த்தத்தை உணர்ந்து நம்பிக்கையுடனும், உறுதியுடனும் நம் குடும்பத்தினரின் நல்வாழ்க்கைக்காகவும் பொறுமையுடன் முன்னேற வாழ்த்துகள் சகோ! முதுகு வலிக்கு நல்ல உடற்பயிற்சியினை தினம் செய்யுங்கள். பறந்து விடும். இல்லாவிடில் இம்சை தான் (அனுபவம்)

Asiya Omar சொன்னது…

வேலைப்பளு மத்தியிலும் அருமையான பகிர்வு சகோ.

துபாய் ராஜா சொன்னது…

அருமையான கவிதைகள் அனைத்தும் அழகு.

பணி பளு தீரவும், பிணி வலி குறையவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் வேண்டுவோம்.

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதைகள் அருமை குமார். எல்லாம் நலமாக வாழ்த்துக்கள்..:)

உணவு உலகம் சொன்னது…

அருமையான தொகுப்பு. பூரண உடல் நலம் பெற வேண்டுதல்களுடன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

சின்னச்சின்ன கவிகள் அனைத்தும் அருமை...

//பூத்தது தவறா...
குமரியான சிறுமி..!//

ரெண்டே வரியில் ஏராளமான அர்த்தம் பொதிந்து கொடுத்த விதம்.. சூப்பர்!

வாழ்த்துக்கள்! :)

vidivelli சொன்னது…

கானகத்தில் மழை...
நனைந்த குருவிகளின்
சப்தத்தை கேலி
செய்தது மரங்கொத்தி
மரம் விழும் வரை..!/

குமாரண்ணா அருமையான கவிதை வரிகள் ..
எல்லாமே அற்புதமாய் இருக்கு..
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
சிக்கென நன்றியும் உண்மைதான்...
அனைத்துக்கும் அன்புடன் பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இலக்கியத்தேனிக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பதிவின் கடைசி பத்தி நெஞ்சை கனக்க வைத்தது, கிட்டத்தட்ட நாம் எல்லோரும் அப்படித்தான்

கதம்ப உணர்வுகள் சொன்னது…

குட்டி கவிதைகள் எல்லாமே சிறப்பு சே. குமார்...

அன்பு வாழ்த்துகள் சே.குமார்....

Jaleela Kamal சொன்னது…

கவிதை மிக அருமை.
வலைசரத்தில் அறிமுகம் நீங்க சொன்னாமாதிரி ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
எனக்கும் இண்ட்லியில் ஓட்டு இனைக்கவோ போட வோ முடியவில்லை.

செய்தாலி சொன்னது…

சிறப்பான வரிகளின் தொடுப்புக்கள்
சிறந்த கவிதைகள்

மனோ சாமிநாதன் சொன்னது…

அருமையான கவிதை!

'இலக்கியத் தேனீ' விருதுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்!
முதுகு வலி, அம்ன வலி இரண்டிலிருந்தும் விரைவில் மீண்டெழுந்து வாருங்கள்.

தங்கள் நலன் விரும்பும் சகோதரி
மனோ சாமிநாதன்