மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கிராமத்து நினைவுகள் : களிமண்


எங்கள் கிராமத்து ஊரணிகளின் கரையில் கிடைக்கும் களிமண் (அதாங்க நம்ம பள்ளிக்கூட வாத்தியார் திட்டும்போது சொல்வாரே அதே களிமண்தான்) எங்கள் சிறுவயது விளையாட்டில் அதிகம் பங்காற்றியிருக்கிறது.

பள்ளிக்காலத்தில் ஊரணியில் தண்ணீர் நிறைந்திருக்கும் காலத்தில் விடுமுறை தினத்தில் பின்புறம் இரண்டு பக்கமும் வட்டமாக கிழிந்த டவுசரை அரணாக் கொடியில் சிறையிட்டுவிட்டு களிமண்ணை தோண்டி எடுத்து வந்து அதில் மாட்டு வண்டி, மாடு, குழாய் ரேடியா, தேர், பாத்திரம் பண்டம், அடுப்பு என மனதில் தோன்றும் எல்லா வடிவங்களும் செய்து அதை பாலீஷ் செய்ய அதிகம் பயன்பட்டது எச்சில்தான்.

அதன்பிறகு அவற்றை வெயிலில் காயவைத்து விளையாட பயன்படுத்துவோம். அதில் போட்டி வேறு. குழாய் ரேடியோ வீட்டின் முன் இருக்கும் மரத்தில் கட்டி அவரவர் மனதில் பட்ட பாடலை காட்டுக் கத்தாய் கத்துவோம்.

நம்ம மச்சான் இதுல ரொம்ப தீவிரமா இறங்கிடுவாரு... குழாய் ரேடியோவை வீட்டின் அருகில் இருக்கும் வேப்ப மரத்தில் ஏறி உயரத்தில் கட்டி அதற்கு அவன் அம்மாவின் கண்டாங்கிச் சேலையை கிழித்து வயர்போல் கட்டி இரவு ஏழு மணிக்கு 'நானும் உந்தன் உறவை...' என்று கத்த... இல்லையில்லை பாட ஆரம்பித்தாரென்றால் இரவு 11 மணி வரை ஒரே அலறல்தான். அவனோட அம்மா எதாவது சொன்னால் அதன் பிறகு அவர் பேசவே முடியாது. யாராவது கேட்டால் 'ஒ வீட்லயா பாடுறேன்... ஒ வேலையப்பாரு'ன்னு நல்ல சுத்த தமிழ் வார்த்தைகளால பேச கேட்டவர் நரகலை மிதித்தவர் போல முகத்தை வைத்துக் கொண்டு சென்று விடுவார். காலையில் எத்தனை மணிக்கு எந்திரிக்கிறாரோ அப்பவே 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா'வோடு பாட்டு ஆரம்பிக்கும் அவருக்கு போரடித்தால் வேற விளையாட்டுக்குச் செல்வார்.

இந்த முறை ஊருக்குச் செல்லும் போது திருவிழாவிற்கு வந்திருந்த எல்லாரும் இது குறித்து பேசி சிரித்தபோது 'ஆமாண்டா இன்னும் குழா ரேடியோ கட்டி விளையாடனும் போல இருக்கு'ன்னு அவன் சொன்னப்ப 'ஐயோ மறுபடியும் பாட்டா' என்று எல்லோரும் சொல்லிச் சிரித்தோம்.

இன்னொரு பங்காளி கொஞ்சம் வித்தியாசமானவர், அவருக்கு படப்பாடல்களில் எல்லாம் நம்பிக்கையில்லை. பங்குனியில் தொடங்கி ஆடி மாசம் வரை நடக்கும் திருவிழாக்களில் நடத்தப்படும் நாடகங்களை பார்த்து அது மாதிரி களிமண் குழாய் ரேடியோவெல்லாம் கட்டி பசங்களை வைத்து நாடகம் நடத்துவார். 'மேயாத மான்...' என்று அவர் வள்ளி திருமணம் நடத்தும் அழகே தனி. அவர் ஏற்ற இறக்கத்துடன் பாட ஆரம்பித்த உடன் அவங்க அம்மா 'தம்பி ஆரம்பிச்சிட்டியா... சும்மா இருக்க மாட்டியேன்னு' திட்ட ஆரம்பிப்பாங்க. அவருக்கு அதெல்லாம் கவலை இல்லை, மேயாத மானை விரட்டுவதிலே குறியாய் இருப்பார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கோயில் கட்டி தேர்த்திருவிழா நடக்கும். களிமண்ணில் கட்டிய கோவிலில் இருந்து தேர் கிளப்பி வாய் தாளங்களுடன், மச்சானின் பாட்டுடன் பங்காளியின் வள்ளி திருமணத்துடன் நடக்கும் தேர்த்திருவிழா கடைசியில் கோவில் வந்து நிறைவுறுவதற்குள் வாய்த்தகாராறு கையில் இறங்கி அடிதடியில் களிமண் தேர் உடைந்து நகக்கீரல்களுடன் விளையாட்டு வினையான கோபத்தில் பிரிந்து செல்வோம்.

நகக்கீரல்கள் காயும் முன் அடுத்த நாளோ அடுத்த விடுமுறை தினத்திலோ மீண்டும் களிமண் பொம்மைகளுடன் அடுத்த திருவிழாவுக்கு தயாராகிவிடுவோம்.

இப்ப அனைவரும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்தாலும் சந்திக்கும் தருணங்களில் அந்த சந்தோஷ பருவம் மனசுக்குள் மலரத்தான் செய்கிறது.

-'பரிவை' சே.குமார்

26 எண்ணங்கள்:

எட்வின் சொன்னது…

ம்ம்ம்... மலரும் நினைவுகள். டவுசர், பின்புறம் வட்டமாக கிழிந்திருத்தல், அரணாக் கொடி எதுவும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது.

குழாய் ரேடியோக்கு இணை குழாய் ரேடியோ தான். அதுவும் நம்ம களிமண் ரேடியோன்னா சும்மாவா! அத செய்யும் போது வரும் சண்டை இருக்குதே அதுவும் சுவாரஸ்யம் தான்.

களிமண்ண நண்பர்களோடு மாறி மாறி மூஞ்சிலயும், உடம்பிலயும் தேய்ச்சி விளையாடுறதும் பால்ய காலத்திற்கே
உரித்தானவை.

பகிர்வுக்கு நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நினைவுகள் இனிக்கிறது நண்பரே...

RAJA RAJA RAJAN சொன்னது…

"இப்ப அனைவரும் குடும்பம் என்ற வட்டத்துக்குள் வந்தாலும் சந்திக்கும் தருணங்களில் அந்த சந்தோஷ பருவம் மனசுக்குள் மலரத்தான் செய்கிறது..."

அதே தாங்க... அதே தான்...!
பின்னுங்க...!

http://communicatorindia.blogspot.com/

r.v.saravanan சொன்னது…

நானும் இது போல் நிறைய களி மண் வைத்து நிறைய விளையாடியிருக்கிறேன் என்ன தான் சொல்லுங்கள் குமார் நமது இளமை நினைவுகளின் இன்பம் இனி எப்போது கிடைக்கும்

Chitra சொன்னது…

நகக்கீரல்கள் காயும் முன் அடுத்த நாளோ அடுத்த விடுமுறை தினத்திலோ மீண்டும் களிமண் பொம்மைகளுடன் அடுத்த திருவிழாவுக்கு தயாராகிவிடுவோம்.


..... அதுதான் கிராமிய மணம் வீசும் வசந்த காலம் என்கிறார்களோ!

பின்னோக்கி சொன்னது…

இளமைப் பருவ நினைவுகள் அருமை

ஈரோடு கதிர் சொன்னது…

நொங்கு வண்டிக்கு அடுத்து இதுதான் மனசில வச்சிருந்தேன்

நான் நினைத்ததைவிட மிக அழகாக இருக்கிறது உங்கள் எழுத்தில்

சூப்பர் குமார்

சுசி சொன்னது…

அப்பா கிராமத்துக்கு போய் நாங்க செய்ற கூத்து நினைவுக்கு வருது குமார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எட்வின்...
உண்மைதான்... சிலர் வழியும் மூக்கை புறங்கையால் துடைத்துக் கொண்டே செய்யும் ரேடியோ, மாட்டிவண்டியோ கொடுத்த சந்தோஷத்தை இந்தக்கால விளையாட்டுச் சாதனங்கள் தருவதில்லை.

நாம் அனுபவித்த பல விசயங்களை நம்ம குழந்தைகள் அனுபவிக்கவில்லை என்ற ஆதங்கம் மனதுக்குள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
பால்ய கால நினைவுகள் அறுவதிலும் இனிக்கத்தானே செய்யும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ராஜ ராஜ ராஜன்...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
அந்த நாட்கள் இனிமையானவைதானே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சித்ரா மேடம்...
என்ன பிரச்சினை என்றாலும் ஒரு நாள் முகம் பார்க்காமல் இருந்தாலும் மறு நாளே மீண்டும் ஒன்று கூடி சந்தோஷித்த அந்த நாட்களின் பசுமை எப்போதும் இனிமைதானே..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கதிர் அண்ணா...
உங்க நொங்கு வண்டி அருமை... இது அந்தளவுக்கா இருக்கு?
நீங்களும் எழுதுங்கள் அண்ணா...
களிமண் காலம் உங்கள் கை வண்ணத்தில் மலரட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பின்னோக்கி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சுசி...
அனுபவங்கள் என்றும் இனிமைதான்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Menaga Sathia சொன்னது…

super!! azagana malarum ninaivugal...

மனோ சாமிநாதன் சொன்னது…

மலரும் நினைவுகள் என்றுமே தோண்டத் தோண்ட பீரிட்டு வரும் நீரூற்று மாதிரி சில்லென்ற ஒரு சுகம் தரும்!
உங்கள் பதிவைப் படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவரவர் களிமண் பிசைந்து சொப்பு சாமான்கள் செய்து விளையாடிய குழந்தைபருவ நினனவலைகள் மனதில் சாரலாய் அடிக்க ஆரம்பிக்கின்றன! எனக்கும் சேர்த்துத்தான்!!

ம.தி.சுதா சொன்னது…

ஆஹா அருமை நினைவுகளை நினைக்கையில் எப்போதும் சுகம் தான்...

Unknown சொன்னது…

இளமைப் பருவ நினைவுகள் அருமை

vanathy சொன்னது…

குமார், நல்லா இருக்கு. இது உங்கள் அனுபவமா? இந்த களிமண்ணை மறக்கவே முடியாது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மனோ அம்மா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ம.தி.சுதா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானதி...
ம்... இது எனக்கும் எனது கிராமத்து உறவுகளுக்குமான அனுபவம்தான்.
அனுபவங்கள் என்றும் சுகமானவைதானே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அம்பிகா சொன்னது…

களிமண்ணாக குழையும் அழகான மலரும் நினைவுகள்.

அப்பாதுரை சொன்னது…

பானையிலிருந்து நீரும் மோரும் எடுத்துச் சாப்பிட்ட சிறுவயது நினைவு வருகிறது. களிமண் பானைக்கு குளிர்ச்சி எப்படி வருகிறது, உங்களுக்குத் தெரியுமா?

(followers எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை, குமார். blogger designல் பார்த்தால் 'gadget experimental - not available in all blogs' என்று செய்தி சொல்கிறது. நண்பனிடம் உத்தி கேட்டேன்; கண்ட கண்ட blogக்கெல்லாம் followers வரக்கூடாதுன்றதுனாலதான் அப்படி மெசெஜ் வருதுன்னான்!)

Alli சொன்னது…

Hi kumar sir,
என்னை ஞாபகம் இருகிறதா?
எதேச்சயாக உங்கள் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (இன்னும் முழுமையாக படிக்கவில்லை). உங்கள் படைப்புகள் மிக அருமை. உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்பொழுது ஒரு கிராமத்திற்கே சென்று நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. எதார்த்தமான, இயல்பனா, வட்டார வழக்கு சொற்களுடன் வாசிக்கும்பொழுது ஒரு பாரதிராஜா கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சற்று பொறமையாகவும் உள்ளது. இது போன்ற விளையாட்டுகள், அனுபவங்கள் எங்களுக்கு வாய்க்கவில்லை என்று. உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

அல்லி

Alli சொன்னது…

Hi Kumar Sir,

என்னை ஞாபகம் இருகிறதா?
எதேச்சயாக உங்கள் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. (இன்னும் முழுமையாக படிக்கவில்லை). உங்கள் படைப்புகள் மிக அருமை. உங்களின் எழுத்துக்களை வாசிக்கும்பொழுது ஒரு கிராமத்திற்கே சென்று நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது. எதார்த்தமான, இயல்பனா, வட்டார வழக்கு சொற்களுடன் வாசிக்கும்பொழுது ஒரு பாரதிராஜா கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. சற்று பொறமையாகவும் உள்ளது. இது போன்ற விளையாட்டுகள், அனுபவங்கள் எங்களுக்கு வாய்க்கவில்லை என்று. உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

அல்லி

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பு அல்லி...
நலமா இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலம்தானே?
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் என் நினைவில் எப்போதும் இருப்பீர்கள்... நான் ரசித்த, நான் வாழ்ந்த, என் மக்கள் வாழ்க்கையை இங்கு பதிகிறேன். அம்புட்டுத்தான்... பாலைவன வாழ்க்கையில் வேலை, வேலை விட்டால் தங்கும் அறை என்பதால் எதாவது செய்யலாம் என்று விட்ட எழுத்தை தொடர்கிறேன். உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியை தந்தது...எல்லாவற்றையும் படித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சந்தோஷ் தருணங்கள் மகிழ்ச்சிப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

வலைச்சர அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..!