மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பிக்பாஸ் : ஆண்டவரே இது சரியா?

பிக்பாஸ் வீட்டுக்குள் தான் வைத்ததே சட்டமென ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்ளும் விதமாக உள்ளடி வேலை பார்த்தல், கெட்ட வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசுதல், ஒருவரை ஒதுக்கி வைத்து முடிந்தளவுக்கு அவருக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தல் என ஐம்பத்தைந்து நாட்களாக அடித்து ஆடிக் கொண்டிருந்த காயத்ரி அவர்களை ஒருவழியாக நேற்று வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 

Image result for பிக்பாஸ் காயத்திரி

இதே காயத்ரியை சென்ற முறை ஒரு எளிய கேள்வி பதிலின் மூலமாக காப்பாற்றினார் பிக்பாஸ்... இதற்குப் பார்வையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வர, இந்த முறை காப்பாற்றும் முயற்சியில் இறங்கவில்லை என்றாலும் சுஜா, காஜல் என்ற இரண்டு ரவுடிகளை காயத்ரிக்கு பதிலாக களம் இறக்கியிருக்கிறார் பிக்பாஸ்... மேலும் காயத்ரி விதைத்த வன்ம விதை ஆரவ்வுக்குள்ளும் ரைஸாவுக்குள்ளும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த வாரம் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படப் போகும் அந்த இருவர் சிநேகனும் வையாபுரியுமாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

சரி காயத்ரியின் வழி அனுப்புதலில் கமல் நடந்து கொண்ட விதம் சரியா? என்ற கேள்வி பலரிடம் இருப்பதை முகநூல் பதிவுகளில் காண முடிகிறது. அதில் உண்மையும் இருப்பது போல்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்வுகள் இருந்தது. 

ஒரே சாதி அதான் கமல் காயத்ரிக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் என்ற பேச்சுக்கு நேற்று காயத்ரி முன்னிலையில் பதில் அளித்த கமல், நான் அப்படியா என்று கேட்டார்... அதில் தனது கோபத்தையும் காட்டினார்... நியாயம்தான்.. கமலைப் பொறுத்தவரை சாதி எதிர்ப்பாளர்தான் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் காயத்ரி விஷயத்தில் சாதியோ மண்ணாங்கட்டியோ நடந்து கொண்ட விதம் ஆதரவுக்கரம் நீட்டுவது போல்தானே இருந்தது ஆண்டவரே.

இதுவரை வழி அனுப்பி வைத்தவர்களுக்கு போட்ட குறும்படங்களும் காயத்ரிக்குப் போட்ட குறும்படமும் உங்கள் எண்ணப்படி சரியாகத்தான் இருந்ததா? மனசைத் தொட்டுச் சொல்லுங்கள்... 

காயத்ரியிடம் கேள்விகள் கேட்கப்பட்ட விஷயத்தில் மக்கள் கேட்க வேண்டியதைக் கேட்டு, உரைக்க வேண்டியதை உரைக்க வைத்தல்தான் சிறந்து அப்படின்னு கமல் நினைத்திருக்கலாம் என்று வக்காலத்து வாங்கினாலும் அவரே கேள்விகள் கேட்டிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. மேலும் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் சாதாரணக் கேள்விகளே. தான் வில்லிதான் என்பதை மறைத்து எப்பவும் கமலைப் பார்த்ததும் செயற்கைச் சிரிப்போடு இருக்கும் காயத்ரி மேடையிலும் செயற்கைச் சிரிப்போடு பேசினாலும் அவ்வப்போது அவருக்குள் சொர்ணாக்கா எழத்தான் செய்தது... கமல் அடக்கவில்லை.... மடக்கிக் கேள்வியும் கேட்கவில்லை என்பது ஏமாற்றமே.

ஜூலி... சுயமாய் சிந்திக்கத் தெரியாத ஒரு பெண்... காயத்ரியின் சூதாட்டத்தில் சிக்கிய முதல் காய்... அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பொய் சொல்லி தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்... மற்றபடி அவர் ஓரளவுக்கு எல்லாருடனும் அன்பாய்த்தான் நடந்து கொண்டார். ஒவ்வொரு முறை ஓவியாவுடன் இணக்கமாகும் போதும் பின்னணியில் சதி செய்து பிரித்தது காயத்ரிதான். மேலும் காயத்ரி தனது பிரித்தாளும் செய்கையை ஜூலி, சக்தி, ரைஸா, ஆரவ் வாயிலாக நிகழ்த்தியதை எல்லோரும் அறிவோம். பரணி விழுந்தா கால்தானே உடைஞ்சிருக்கும், சாகவா போறான் என்றதும்... ஓவியா பிரச்சினையில் விளையாண்டதும்... ஒவ்வொருவரையும் கேவலமாகப் பேசியதும் காயத்ரிதான் என்பது தெரிந்தும் மழுப்பலான வழி அனுப்பல் ஏன் தலைவரே?

ஜூலியிடம் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டீர்... கஞ்சாக்கருப்பு, நமீதா ஏன் சக்தியிடம் கூட ட்ரிக்கர் இல்லாமல் ட்ரிக்காக கேள்விகள் கேட்டீர்கள். காயத்ரி என்று வரும் போது எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கலாம்... ஓவியா ஆரவ் காதலைப் பிரித்தது? ஜூலி ஓவியாவைப் பிரித்தது? சிநேகன் ஆரவை மோதவிட்டது? புதிதாக வந்தவர்கள் குறித்துப் பேசியது என எத்தனை கேள்விகளைக் கேட்டிருக்கலாம். எதுவுமே கேட்காமல் மக்களே நீங்களே கேளுங்கள் என்று விலகி இருந்து கொண்டு டுவிட்டரில் முகம் தெரியாது என்பதால் பேசினீர்களா? என்று மக்களைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்கிறீர்களே...? இதுதான் சரியான வழி அனுப்பலா ஆண்டவரே?

சரி குறும்பட விஷயத்துக்கு வருவோம்... ஜூலிக்கான குறும்படத்தில் அவர் குறித்து மற்றவர்கள் பேசியதைக் காட்சிப்படுத்தினீர்கள்... உண்மையிலேயே பொய் பேசி மக்களிடம் திட்டுக்களை வாங்கியிருந்தாலும் பரவாயில்லை சார்... அது என் குடும்பம்தானே என பெருந்தன்மையாக சிரித்துச் சென்றாள் அந்தப் பெண். அதேபோல் காயத்ரியிடம் அவர் செய்த அட்சகாசங்களைக் காட்டியிருந்தால் பெருந்தன்மை காட்டியிருப்பாரா? இந்தக் கேள்வி தங்களுக்குள்ளும் எழுந்ததால்தான் பாசிட்டிவ்வான விசயங்களை மட்டும் குறும்படம் ஆக்கினீர்களோ? 

ஓவியா மூன்று முறை அம்மான்னு சொன்னாங்கன்னு குறும்படத்துல காட்டுன நீங்க... பல முறை சொன்ன 'ஹேர்', 'மூஞ்சி முகரக்கட்டை','நாய்' எல்லாம் காட்டவில்லையே ஏன்? இப்பொழுதுதான் இது கேம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று சொன்ன அவரிடம் அந்த வீட்டுக்குள் கேம் விளையாண்டதே தாங்கள்தானே எனச் சொல்லவில்லையே ஏன்? ஜூலிக்கு ஒரு முகம்... காயத்ரிக்கு மற்றொரு முகமா...? இதுதான் நீங்க பார்த்துக் கொண்டே இருப்பேன் என்று சொன்னதன் அடையாளமா?

மக்கள் கேள்விகள் என புதியவர்கள் மூவரையும் கேள்வி கேட்க வைத்து காயத்ரி இல்லாத வாரத்தை சூடாக கடத்திச் செல்ல மெல்லப் பற்ற வைத்திருக்கிறீர்கள். அதுவும் நல்லாவே பத்திக் கொண்டிருக்கிறது.. இனி வரும் நாட்களில் அது காட்டுத் தீயாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுதானே வேணும்... இதுதானே டி.ஆர்.பிக்கான ஆட்டம்... பொறுப்பாய் செய்திருக்கிறீர்கள். 

காயத்ரியுடன் எப்படி டான்ஸ் ஆடலாம் என்றும் சிலர் கேட்கிறார்கள். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆடியதில் தவறில்லை என்பது என் எண்ண்ம்... இருப்பினும் தங்களின் அன்பு மற்றவர்களைவிட காயத்ரிக்கு எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பது அந்த முத்தத்தில் தெரிந்தது. இனி வரும் நாட்களில் யாருக்கும் சார்பாக... உங்கள் மொழியில் பாரபட்சமாக (யானைக்கும் அடிசறுக்கும் நேற்று சார்பாக என்பதை பாரபட்சமென சொல்லி அடி சறுக்கினீர்கள்... இது கூட பேசு பொருளாக அடித்து ஆடிக் கொண்டுதான் இருக்கிறது) இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

ஓவியா வெளியே போனபின் சனி, ஞாயிறு மட்டுமே பார்க்கும்படி இருந்தது. இந்த வாரம் அதிலும் சறுக்கல்... வரும் வாரத்தில் சூடு பிடிக்குமா ஆண்டவரே..? என்னதான் தாங்கள் சார்பாக, பாரபட்சமாக இருந்தாலும் தங்களின் முக நளினங்கள் ஆஹா... அசத்தல்... மற்ற மொழிகளில் பிக்பாஸ் எப்படியோ தமிழில் தனித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்... உங்கள் பேச்சு, முகபாவம் எல்லாமே தனித்துவம்தான்... வரும் வாரங்களில் தனித்துவம் கெடாமல் பார்த்துக் கொள்வீர்கள்தானே..?
-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

அன்பே சிவம் சொன்னது…

இந்நிகழ்ச்சியே ஒரு நேரங் கொல்லி இதற்க்கு பதில் வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால்
பார்க் 'கலாமே' BOSS.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பிக் பாஸ்
பார்ப்பதில்லை நண்பரே

துரை செல்வராஜூ சொன்னது…

இதையெல்லாம் இன்னுமா பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்!?..
அது சரி அதென்ன ஆண்டவர்?...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இதைப் பார்க்காததால் கருத்து கூற முடியவில்லை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஸ்பெஷல் குறும்படம் இருந்திருக்க வேண்டுமோ...?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
மன உளைச்சல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் சகஜ நிலைக்கு... எழுத்துக்கு திரும்ப முடியவில்லை. எழுதலாம் என்று நினைக்கும் போது அயற்சிதான் தோன்றுகிறது. யூடிப்பில் படம் பார்ப்பதும்... பிக்பாஸ் சனி,ஞாயிறுகளில் பார்ப்பதுமாகத்தான் பொழுது போகிறது.

என் கணிப்பொறியில் ஏதோ பிரச்சினை... அலுவலக கணிப்பொறியில் கருத்துப் போட்டால் ஓகே... என் கணினியில் போட்ட கருத்தெல்லாம் போயே போச்சு... வாசிச்சாலும் கருத்து இட முடியாததால் ஆண்டவரை பார்த்தேன்... :)

ஆ... ஆண்டவர் தெரியாதா? இப்ப இணைய இதழ்கள்... டுவிட்டர் ... பேஸ்புக்கெல்லாம் ஆழ்வார்பேட்டை ஆண்டவரை... ஆண்டவர்ன்னுதானே சொல்றாங்க... :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
சில பிரச்சினைகளால் எதுவும் சொல்லிக்கிற மாதிரி எழுதல.... அலுவலக பணியின் சுமை, பொருளாதார நெருக்கடி, மனைவியின் உடல் நலம் என எப்பவும் டென்சன், அதனால சிலவற்றை பார்ப்பேன்... சனி, ஞாயிறு கமலின் தனித்துவத்துகாக பிக்பாஸ் அவ்வளவே...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்திற்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றி ஐயா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஜூலிக்கு காட்டியதுபோல் காட்டாதது தவறுதானே...
பூசி மெழுகும் படம் போடாமல் ஸ்பெஷல் குறும்படம் இருந்திருக்கலாம்.

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கும் காயத்திரிக்கு சரியான குறும்படம் போடவில்லை என்றே தோன்றியது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பிக்பாஸ் அப்ப எல்லாரையும் செமையா ரசித்துப் பார்க்க வைத்து நல்ல டைம் பாஸோ....