மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மனசு பேசுகிறது : வெளிநாட்டு வாழ்க்கை

டந்த வாரத்தில் அறை மாறும்படியான சூழல் அமைந்துவிட்டது. எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு புதிய அறைக்கு வந்து எழுபத்தி ஐந்து சதமானம் செட்டில் ஆயாச்சு. இண்டர்நெட் இல்லாமல் ஒரு வார வாழ்க்கை ரொம்ப போரடிச்சிப் போச்சு. இன்னைக்குத்தான் இண்டர்நெட்டை பழைய இடத்தில் இருந்து புதிய இடத்திற்கு மாற்றிக் கொடுத்தார்கள்.

வெளிநாட்டு வாழ்க்கையில் பேச்சிலராய் நான்கைந்து பேர் ஒன்றாகத் தங்கி ஒரு சிறிய அறைக்குள் கீழும் மேலுமாக இருக்கும் இரட்டைக் கட்டில்கள் இரண்டோ அல்லது மூன்றோ போட்டு அதில் படுத்து எழுந்து வேலைக்குப் போய் வரும் வாழ்க்கை என்பது சுத்தமாக் பிடிக்காத ஒன்றுதான் என்ற போதிலும் கடந்த சில ஆண்டுகளாக அதுவே வாழ்க்கை ஆகிப் போனது.

கடந்த நான்கு வருடங்களாக ஒரே அறையில் வாசம்... இடையில் அலைனில் வேலை என்றாலும் வார விடுமுறையில் வரப்போக இருந்து பின்னர் அபுதாபி வந்ததும் அதே அறையில் தொடர்ந்தது பயணம். அந்த அறையில் நாங்களே ராஜா... நாங்களே மந்திரி... ஆம் அது இங்கு ஹோட்டல் நடத்தும் தமிழர் எடுத்திருந்த வீடு. அதில் மொத்தம் மூன்று படுக்கை அறைகள். அதில் பாத்ரூம் இணைந்த அறையில் நாங்கள் தங்கியிருந்தோம். மற்ற இரண்டு அறைகளிலும் அவரது ஹோட்டல் ஊழியர்கள் தங்கியிருந்தார்கள். கிச்சன் எங்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்தது என்பதால் பிரச்சினை என்பதே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.

இங்கு கிச்சனைச் சொல்லக் காரணம் என்னவென்றால் பேச்சிலர்கள் தங்கும் இடங்களில் மூன்று நான்கு அறைகள் இருந்தால் ஹாலைக் கூட இரண்டாக தடுத்து இரண்டு அறைகளாக்கி வாடகைக்கு விட்டுவிடுவார்கள். இரண்டு அறைகளுக்கு ஒரு பாத்ரூம் அல்லது மூன்று அறைகளுக்கு ஒரு பாத்ரூம் என இருப்பதால் குளிக்கும் போது வெளியில் நின்று ஒருவன் தட்ட ஆரம்பித்துவிடுவான். காலையில் வேலைக்குப் போகும் போது இதுபோல் நடந்தால் அன்றைய பொழுது எப்படியிருக்கும் சொல்லுங்கள். அதேபோல் கிச்சனிலும் நாலைந்து அடுப்புக்களை வைத்து சமைக்கும் போது இருக்கும் கஷ்டம் இருக்கே... யப்பா சொல்லி மாளாது.

இதில் எங்களுக்கு சற்று ஆறுதல் இதுவரை பாத்ரூம் பிரச்சினையோ கிச்சன் பிரச்சினையோ இருந்ததில்லை. இங்கு வந்ததும் இரண்டு பாத்ரூமை மூன்று அறையில் இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளச் சொன்னார் இப்போதைய தங்கும் இடத்தின் உரிமையாளரான மலையாளி. பக்கத்து அறைக்காரன் நம்ம தமிழன். மலையாளி மலையாளிக்கு உதவுவான் ஆனால் தமிழன்தான் தமிழனுக்கு பாறை வைப்பான். இவனுங்களும் பெரிய எஸ்டேட் முதலாளிக மாதிரி பேசுனானுங்க. சரிடா... பேசுற வரைக்கும் பேசுங்கடான்னு நினைச்சிக்கிட்டு மற்றொரு அறையில் இரண்டு மலையாளிகள்... சொந்தத் தொழில் வைத்திருக்கிறார்கள். எனவே அவர்களுடன் ஒரு பாத்ரூமை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்கிட்டோ தொலைங்கடான்னு சொல்லிட்டு பாத்ரூம் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தாச்சு.

கிச்சனில் இதுவரை நான்கு அறை ஆட்கள் சமைக்கிறோம். நம்ம தமிழனுங்க என்னவோ இந்த பிளாட்டே அவனுங்களோடது மாதிரி கிச்சனையும் ஆக்கிரமிச்சிக்கிட்டு அலம்பல் பண்ணுனானுங்க. இன்னைக்கு நான் சமையல் பண்ணும் போது அவனுங்க நாலு பேரும் எதோ கல்யாணத்துக்கு சமைக்கிற மாதிரி ஓவரா பில்டப் விட்டுக்கிட்டு நின்னானுங்க. அப்போ மற்றொரு அறை தமிழ் நண்பர் சமைக்க வந்தார். பாத்திரத்தை கிச்சன் சிங்கில் வைத்துவிட்டு எதோ எடுக்க ஆரம்பித்தார். அதற்குள் இவர்கள் இங்க பாத்திரத்தை வைக்காதீங்க... கழுவினா எடுங்க ஆ... ஊன்னு ஆளாளுக்கு கத்தினானுங்க... அவரு ரொம்ப பொறுமையா பார்த்தாரு. நீங்க கழுவப் போறீங்களான்னு கேட்டாரு... எடுங்கன்னு சொன்னோம்... கிளியரா இருக்கணுமின்னு அந்த நாலுக்கும் தல பேசுச்சு... நாங்களும் கழுவத்தான் வந்திருக்கோம். உங்க வேலை என்னவோ அதைப் பாருங்கன்னு சொல்லிட்டாரு... தல தொங்கிப் போச்சு.

சரி விடுங்க... ஆடுற மாட்டை எப்படி அடக்கலாம்ன்னு நமக்குத் தெரியாதா என்ன... சீக்கிரமே அடங்கிடுவானுங்க.. இங்க அறை கிடைப்பது என்பது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. ஏன்னா பேச்சிலர்ஸ் சிட்டிக்குள்ள தங்கக்கூடாது அப்படியே தங்கினா மூணு பேருக்கு மேல தங்கக் கூடாதுன்னு ஏகப்பட்ட கெடுபிடி... பேமிலி பிளாட்ல தங்கினா ஒரு பிரச்சினையும் இல்ல.. பேச்சிலர் பிளாட்டுன்னா அடிக்கடி போலீஸ் செக்கிங் வேற... மூணு பேருக்கு 2500, 3000 திர்ஹாம் கொடுத்து அறை எடுக்க முடியுமா? இப்போ நாங்க கூட மூணு பேருக்கு கட்டில் ஒரு ஆள் கிழே படுக்கிறோம்ன்னுதான் இந்த அறையை எடுத்திருக்கிறோம். பெரிய அறை... நல்ல காற்றோட்டமான சன்னல், சிட்டிக்கு உள்ள மெயின் ரோட்டின் அருகில்... பிளாட்டில் இருந்து இறங்கினால் எல்லாக் கடைகளும் அருகருகே என எல்லா வசதிகளும் இது வரை இருந்த அறைகளைப் போலவே இருப்பது சிறப்பு.

போன மாதம் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு ஆளுக்கு சாப்பாடு, அறை வாடகை, இணையம் என எல்லாமாய் நம்ம ஊர் காசுக்கு பதினைந்தாயிரம் வரை செலவானது. இங்கு அது நெருக்கி இருபதைப் பிடிக்கலாம். ஏன்னா அறை வாடகை மட்டுமே ஆளுக்கு பத்தாயிரத்துக்கு மேலங்க... என்னமோ போங்க என்ன வெளிநாட்டு வாழ்க்கை...

இனி தொடர்ந்து பேசலாங்க....
-'பரிவை' சே.குமார்.

27 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

மனைவி மக்களை பிரிந்து வாழ்வது கஷ்டம்தான் ,கணிசமா சம்பாதித்து ஊர் திரும்புங்க குமார் !
த ம 1

மகேந்திரன் சொன்னது…

தினமும் அனுபவிக்கும் வாழ்வு....
உங்கள் வரிகளில் இன்னும் விளக்கமாக.....
சரிதான் சகோதரரே....
என்ன வெளிநாட்டு வாழ்க்கை போங்க.....

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது. தங்குமிடம் சரியாக அமையாவிட்டால் கஷ்டம்தான்.

மகிழ்நிறை சொன்னது…

திரைகடல் ஓடி திரவியம் தேடசென்றிருக்கும் நம் எண்ணற்ற சகோதரர்களில் எதார்த்த வாழ்க்கைக்கு ஒரு உதாரணமாய் உங்கள் கட்டுரை சுடும் நிஜம். ஐந்தில் நான்கு என்றொரு சிறுகதை மேல்நிலைப்பள்ளி நாட்களில் படித்தது நினைவு வருகிறது.தமிழ் நண்டுகள் !?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

துபாய், ஷார்ஜா,அபுதாபியில் எல்லாம் ரூம் வாடகை கடுமை என்று கேள்வி பட்டுருக்கேன், ஒரே கட்டிலில் இரண்டுபேர் என்றும் சொன்னவர்கள் உண்டு...!

பஹ்ரைன் எவளவோ பரவாயில்லை மூன்று பேர் தாங்கும் ரூமிற்கு, குறைந்தது எண்பது தினாருக்கு கிடைத்துவிடும் பாத்ரூம் கிச்சன் பிரச்சினை இல்லை...!

உங்களுக்கு கம்பெனி ரூம் தரவில்லையா குமார் ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமங்களை அதிகம் சொல்லவில்லை என்று மட்டும் புரிகிறது... வேறு ஏதாவது தொழில் செய்யும் அளவிற்கு நம்பிக்கை (பணம் அல்ல) வந்தவுடன், ஒரு முடிவு செய்யுங்கள்... வாழ்த்துக்கள்...

வாழ்க்கையே கொஞ்ச காலம் தான் - அதில்
வாலிபம் கொஞ்ச நேரம் தான்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

எவ்வளவு சங்கடங்கள். விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்

ராமலக்ஷ்மி சொன்னது…

புதிய இடத்தில் நன்மைகளும் கூடவே சில சிரமங்களும். சமாளித்து விடுவீர்கள். சீக்கிரமே ஊரில் செட்டில் ஆகும் நாள் வரட்டும்.

Unknown சொன்னது…

கஷ்டம் தான்.என்ன செய்ய?உள்நாட்டிலேயே சரியான வேலை கிடைத்தால் வெளி நாடெல்லாம் எதற்கு?ஹூம்..............!///குடும்பத்தை அழைத்து விட்டால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாமோ?முயற்சித்துப் பாருங்கள்.

Menaga Sathia சொன்னது…

சீக்கிரமே நல்லது நடக்கட்டும் சகோ!!

indrayavanam.blogspot.com சொன்னது…

விரைவில் தீர்வு கிடைக்கட்டும்

ezhil சொன்னது…

இங்கு இருப்பவர்கள் வெளி நாட்டில் வசதியான வாழ்க்கை வாழ்வதாய் எண்ணிக்கொள்கிறார்கள்... அங்கிருக்கும் பிரச்சனைகள் அங்கிருப்பவர்களுக்கு மட்டுமே தெரிகிறது

கவிதை வானம் சொன்னது…

அண்ணேன்...நீங்க சொல்றத பார்த்தா எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை மாதிரில தெரியுது

vanathy சொன்னது…

Tamil people are not united, very divided. Very sad.
Good post.

மாதேவி சொன்னது…

விரைவில் சிரமங்கள் குறையட்டும்.

Unknown சொன்னது…

நல்லதோ, கெட்டதோ நம்ம ஊரு, நம்ம ஊருதான்!ஐயமில்லை!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
வீடு கட்ட கடன் வாங்கியிருக்கு. பார்க்கலாம் குடும்பத்தைக் கூட்டி வர வேண்டும்.... எல்லாம் இறைவன் சித்தம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மகேந்திரன் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாங்க ஸ்ரீராம் அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோ. மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மனோ அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கம்பெனி லெபனான்காரனோடது. லெபனானிகளுக்கு மட்டுமே எல்லா வசதியும்.... நானும் மோதிப் பார்க்கிறேன்... வேறு கம்பெனி முயற்சிக்கிறேன்....

பார்க்கலாம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தனபாலன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கண்டிப்பாக சார்... ஊருக்கு வரவேண்டும் என்ற ஆசை அதிகம்... காலம் ஒத்துழைக்க வேண்டும்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க முரளிதரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாங்க ராமலெஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாங்க சகோ. யோகராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

விரைவில் குடும்பத்தைக் கொண்டு வரவேண்டும்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகாக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


வாங்க சகோ. எழில்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...


வாங்க பரிதி அண்ணேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

இக்கரைக்கு அக்கரை பச்சைதான்...
என்ன செய்வது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இந்திராயவ்வனம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.



வாங்க சகோ. வானதி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க மாதேவி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

செங்கோவி சொன்னது…

கம்பெனி ரூம் கொடுக்கலேன்னா, கஷ்டம் தான் குமார். சீக்கிரம் வேற கம்பெனி பாருங்க.

ஜீவன்பென்னி சொன்னது…

இங்க துபாயில் பஜார்ல உங்க அளவுக்கு கஷ்டமில்ல. ஒரு அறைல பத்து நண்பர்களோட மாசம் பத்தாயிரத்துல போயிட்டிருக்கு. அபுதாபில செக்கிங்லாம் நடக்குதா?. சீக்கிரமா பஜாரா காலிப்பண்ணிடிவாய்ங்க பேச்சு ஓடிட்டு இருக்கு. அப்புடியாச்சுன்னா பேஜ்லர்ஸ் பாடு திண்டாட்டம் தான்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விரைவில் நிலமை சரியாகட்டும் குமார்.....

வெளிநாட்டு வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் புரிகிறது.....