மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

மனசின் பக்கம்: கொஞ்சம் பகிர்வு... கொஞ்சம் வீடியோ...

சென்ற வார ரமலான் விடுமுறையில் சில படங்களை குறிப்பாக பழைய படங்களைப் பார்த்தேன். காக்கிச்சட்டை, சலங்கை ஒலி, மூன்று முடிச்சு என கமல் படங்களாக பார்க்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. காக்கிச்சட்டை சாதாரண மசாலா ரகம்தான். நிறைய இடங்களில் சொதப்பலாக இருப்பது இப்போது பார்க்கும் போது தெரிந்தது என்றாலும் கமலின் நடிப்புக்காகவும் சத்தியராஜ்க்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சலங்கை ஒலி எனக்குப் பிடித்த படங்களில் முக்கியமான படமாகும். சலங்கை ஒலிக்குப் பிறகு கமலின் நடனத்துக்கு சிறப்பானதொரு படம் அமையவில்லை என்பதே எனது கருத்து. பாடல்களும் கமலின் நடனமும் ஆஹா... அருமை. ஜெயப்பிரதா இந்தப்படத்தில் அழகோ அழகு.... அப்படி ஒரு அழகு போங்க... அப்புறம் மூன்று முடிச்சு... கமலுக்கு கௌரவ வேடம், ரஜினி வில்லனாக கலக்கியிருப்பார். ஸ்ரீதேவி கமலைக் காதலித்து... ரஜினியால் காதலிக்கப்பட்டு... ரஜினியின் தந்தைக்கு இரண்டாந்தாரமாக வாக்கப்பட்டு... ம்... கறுப்பு வெள்ளைப் படத்திலும் ஸ்ரீதேவி கொள்ளை கொண்டார். வசந்த கால நதிகளிலே... அருமையான பாடல்... 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் பட்டத்து யானை பார்த்தேன். ஐய்யோ...ஐய்யோ கொல்றாங்களேன்னு தலைவர் கலைஞர் கத்துனமாதிரி கத்திப் பாத்து முடியாம நீங்களே பாருங்கடா சாமிகளான்னு சொல்லிட்டு இழுத்து மூடிக்கிட்டு படுத்துட்டேன். ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு அடுத்த வருடம் விஜய் அவார்ட்ல புதுமுக நடிகைக்கான விருது கிடைக்கும்... நம்ம சரத்குமார் மகளுக்கே கொடுத்தாங்க... இந்தப் பொண்ணுக்கு கொடுக்கமாட்டாங்களா என்ன... விடுமுறை தூக்கம்... சாப்பாடு... சினிமான்னு நாலு நாள் விடுமுறை நாசமாப் போச்சு போங்க...


தலைவா படத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி உண்மையானதாக இருந்தால் வருத்தமான ஒன்றுதான். சினிமாவை சினிமாவாகப் பாருங்கள் என்று சொன்னாலும் அரசியல் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறது. கொடநாட்டில் ஓய்வெடுத்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட எவனையாவது நசுக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் நம்ம முதல்வர். அன்றைக்கு தமிழினத்தலைவர் காவலனுக்கு வேலி போட அம்மா முன்னின்று காவலனை ஜெயிக்க வைத்தார். சும்மா இருக்காம நான் அண்ணா என் மகன் எம்.ஜி.ஆர்ன்னு அப்பா உதார்விட, மகனுக்கு செக் வைத்துவிட்டார். காவல்துறையே சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு போன் பண்ணி எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்களாமே... அம்மாவுக்கு காட்டும் விசுவாசத்தின் அளவு அதிகமாக இருக்கிறதே... 

சரி நான் விஜய் படங்கள் விரும்பிப் பார்ப்பதில்லை, இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒரு நடிகரின் படத்தை நிறுத்தி வைத்து வேடிக்கை பார்ப்பது என்பது மனிதாபிமானமற்ற செய்ல்தானே. மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க கொடநாடு கும்மாளமும் மானாட மயிலாடவும் அறிக்கைகளாக போர் தொடுத்துக் கொண்டிருக்க இடையில் விஜய்யும் மாட்டிக்கொண்டு விழிப்பது பாவமாய்த்தான் இருக்கிறது. இனி ஒவ்வொரு நடிகரின் படத்துக்கும் இது தொடரும் பட்சத்தில் அரசு மீது இருக்கும் மரியாதை கலைந்து போகும் என்பதே உண்மை.  விஜயின் முந்தைய மொக்கைப் படங்களைப் போலில்லாமல் பார்க்கும் விதத்தில்தான் இருக்கிறதாம் தலைவா.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் போட்டியில் அறுபது வயது நிறைந்த பெரியவர் அழகேசன் அவர்கள் பாடுவதைப் பற்றி நண்பர் சிலாகித்தார். நானும் இணையத்தில் தேடி அவர் பாடிய பாடல்களைப் பார்த்தேன். பழைய பாடல்களை அற்புதமாகப் பாடுகிறார். 

கிராமத்தில் வறுமை தொலைத்த கலைஞர்களில் இவரும் ஒருவர். இத்தனை நாள் எங்க இருந்தீங்க என்று திருமதி சைலஷா கேட்டதற்கு வாய்ப்பு அமையவில்லை என்றார். இசைஞானம் இன்றி கேள்விஞானத்தில் பாடும் அற்புதக் கலைஞர். புதிய பாடல்களை வலுக்கட்டாயமாக பாடச் சொல்லும் போது பலவரிகளை மறந்துவிடுகிறார். ஆனால் எப்படியோ தட்டுதடுமாறி பாடிவிடுகிறார். சங்கதி சரியில்லை, பாட்டோடு ஒத்துப் போங்கள் என்று கமெண்டும் நீதிபதிகள் (நடுவர்கள்) சொல்கிறார்கள் என்றாலும் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால் நிகழச்சியை தொகுப்பவர்கள் அழகேசன் என்ற அவரது அழகான பெயரை உச்சரிக்க முடியாமல் (சிறப்பு 'ழ' சீரழித்துவிடும் என்பதால்) அல்கேட்ஸ் என்று நாயைக் கூப்பிடுவது போல் கூப்பிடுகிறார்கள். சாந்தி என்று பாடினால் அதென்ன சாந்தியை அழுத்தி உச்சரிக்கிறீங்க... சாந்தின்னு எதுவும் இருக்கா... பாடும் போது பக்கத்துப் பெண்ணைப் பார்த்தால் அந்தப் பொண்ணையே பாத்துக்கிட்டு இருந்தீங்களே... இப்படி நிறைய அவரைக் கலாய்த்து வயதிற்குரிய மரியாதை இன்றி நடத்துகிறார்கள். இதுவும் சூப்பர் சிங்கர் நாலை பிரபலப்படுத்த என்று நினைத்தால் அதை கொஞ்சம் மாற்றி மனிதனுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தால் நல்லது.


விஷாலின் பேச்சுக்கள் இப்போது அதிகம் ரசிக்க வைக்கும்படியாக இருக்கின்றது. வீட்டில் கணிப்பொறியில் ஸ்கிரீன் சேவராக ஒரு கடல் மூன்று தென்னை மரங்கள் ஒரு படகு என படம் வைத்திருக்கிறார்கள். பாப்பாவிடம் அதை வைத்து அவன் சொன்னது உங்களுக்காக... பாப்பா இந்த மூணு தென்னை மரமும் நான், நீ, அம்மா... இந்தப்படகுல அப்பா வாராங்க... படகு ஸ்ட்ரக்காகி நின்னுருச்சு... அப்பா அங்க இருந்தே நம்மளைப் பாக்கிறாங்க பாரு... இனி அப்படியே கடல்ல குதிச்சு நம்மகிட்ட வந்துடுவாங்க... பய கதை நல்லா சொல்லுறானே... பெரிய கதை ஆசிரியரா வருவானோ.... 

முதல் முறை வீடியோ பகிர்ந்து பார்த்திருக்கிறேன்... YouTube-க்கு நன்றி

-மீண்டும் தொடர்வோம்...
-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

காயத்ரி வைத்தியநாதன் சொன்னது…

நல்லமுயற்சி தம்பி...வாழ்த்துகள்..//பய கதை நல்லா சொல்லுறானே... பெரிய கதை ஆசிரியரா வருவானோ.... //இருக்காதே பின்ன..கதாசிரியரோட பையனாச்சே...:)

Unknown சொன்னது…

உங்கள் பார்வைகள் அருமை!விஜய்.............வேணாம் விட்டுரலாம்,நமக்கு எதுக்கு வம்பு?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சலங்கை ஒலி எனக்கும் பிடித்த படம்.....

விஜயின் தலைவா.... :)