மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 7 ஆகஸ்ட், 2013

விஜய்யின் தலைவா படத்திற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு?!


துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் தலைவா. விஜய் ஜோடியாக அமலாபால், இந்தி நடிகை ராகினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 9ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுக்க சுமார் 2000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை வெளியிட உள்ளனர். இந்நிலையில் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.


சென்னையில் தலைவா படத்திற்கு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) முன்பதிவு செய்ய மு‌யன்ற ஐநாக்ஸ், சத்யம், மகாராணி,  அபிராமி, தேவி, மாயாஜால், பாரத், ஏ.ஜி.எஸ்., பி.வி.ஆர். உள்ளிட்ட 9 திரையரங்குகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. தலைவா படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் திரையரங்கில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை எனும் பெயரில் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



இதுஒருபுறம் இருக்க தலைவா எனும் பெயர் இட்டநாள் முதலே பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த இப்படம் இப்போது ஆளுங்கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சில பல அரசியல் கட்சிகள்(ஆளும்கட்சி?) மிரட்டல் விடுத்து முன்பதிவாக டிக்கெட்டுகளை விநியோகிக்க வேண்டாம் என தடுத்து வருவதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட படஅதிபர்கள், இயக்குனரை அழைத்து பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் தெரிகிறது. படத்தில் தமிழக அரசின் பெரும் சாதனையான இலவச அரிசி, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகளை ஒரு சில காட்சிகளில் கிண்டல் அடித்து இருப்பதாகவும், கேலி செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டு அரசியல் கட்சியினர் பிரச்னையை பெரிதாக்கி வருவதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக நாளை(ஆகஸ்ட் 8ம் தேதி) நடக்க இருந்த தலைவா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்.



இதற்கிடையே தமிழகம் முழுக்க தலைவா படத்தை திரையிடப்ப‌ோவது இல்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பதாகவும் கடைசிகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  



உண்மை உறங்காது, உடனடியாக உலகுக்கு தெரியவரும் என நம்புவோம்.

நன்றி : தட்ஸ்தமிழ் இணையம்
-'பரிவை' சே.குமார்

6 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

டப்பால தூங்கப் போகப் போற படத்துக்கு,இவங்களே விளம்பரம் இலவசமா பண்ணி ஓட வச்சிடுவாங்க போல?

ஸ்ரீராம். சொன்னது…

குமார்.... உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருக்கும்போது தொடரவும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடா "டேய் தகப்பா அண்ணா எம்ஜியார்னு எதுக்குடா வாய்விட்டே"ன்னு ரூம் போட்டு சின்ன டாகுடர் அழுவதாக செய்தி...!

சக்தி கல்வி மையம் சொன்னது…

ரைட்டு,,,

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தக்வலுக்கு நன்றி. தில்லியிலும் வெளியிடுகிறார்கள்.....

சென்னை பித்தன் சொன்னது…

இந்த மாதிரி பிரச்சினைகள் ஒரு விளம்பரமாகி விடுகின்றன படத்துக்கு