மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ரஜினி மகான் அல்ல நல்ல மனிதர்

என்னடா இது மனசுன்னு போட்டிருக்கே... அதுககு கீழே எதுவும் போடாம விட்டுட்டே... மனசு வெறுமையா இருக்கக்கூடாதுடா என்று நண்பன் என்னிடம் கேட்டதற்கு இணங்க மனசுக்கு கீழே 'கண்டது... கேட்டது..." என்று ஒரு நீள பட்டியலே இட்டாச்சு. சரி இனி யாரும் கேட்க மாட்டாங்க அப்படின்னு அப்படியே விட்டாச்சு.

இப்ப என்னடான்னா வேறொரு நண்பன் பார்த்துட்டு "என்ன மாப்ளே இது கண்டது... கேட்டதுன்னு ஒரு பெரிய பட்டியலே போட்டுட்டு சுயசரிதை (நான் சொல்லலை... அவன் சொல்லுறான்) எழுதுறமாதிரி பள்ளி, கல்லூரிக் காலத்தை மட்டும் எழுதுறே... இது ஒரு பக்கம் போகட்டும் வேற எதாவது எழுதுன்னு ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டான் (சும்மா... அப்படித்தானே சொல்ல முடியும்.. வேற எதுவும் உனக்கு எழுத வராதான்னு கேட்டதையா சொல்ல முடியும்... நமக்குன்னு ஒரு கெளரவம் இருக்குல்ல...).

தனியா படுத்து (எத்தனை வருஷமாத்தான் உக்காந்துன்னு சொல்றது. அதனால ஒரு மாற்றம் இருக்கட்டுமேன்னுதான் ) யோசிச்சு பார்த்தப்ப சரி வேற எழுதலாமேன்னு முடிவு பண்ணினேன். கல்லூரிக்காலம் ஒரு புறம் வந்தாலும் அப்பப்ப எதாவது எழுதுவோம்ன்னு எடுத்த முடிவோட முதல் கட்டமா திரு.ரஜினி பற்றி ஒரு சின்ன கட்டுரை எழுதலாமுன்னு முடிவு பண்ணினேன்.

இதை அவரோட பிறந்தநாளான நேற்று எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஒரு சில பணிகளால் முடியவில்லை.

ரஜினி ஒரு சகாப்தமா... சரித்திரமா..? அவர் சகாப்தமாக இருந்தாலும் சரி, சரித்திரமாக இருந்தாலும் சரி முதலில் அவர் ஒரு நல்ல மனிதர். எனக்கு ரஜினியை நடிகர் என்ற முறையில் சத்தியமாக பிடிக்காது (ரஜினி ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிப்பது கேட்கிறது.) ஆனால் அவரை மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் என்ற விதத்தில் ரொம்ப பிடிக்கும் (ஐயோ... ரஜினி ரசிகர்கள் முகத்தில் சந்தோஷத்தைப் பாரேன்).

சொல்லப்போன நான் கமல் ரசிகன். மனசுல கமலை ஒரு பெரிய இடத்தில் வைத்து மதிப்பவன். நடிப்பில் மதிக்கும் கமலை சினிமா தவிர்த்து சுத்தமாக பிடிக்காது. (எப்பூடி... ரஜினி, கமல் இருவரையும் பிடிக்கும் விதம் மாறினாலும் எங்களுக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும்)

பாலசந்தரால் சிவாஜிராவ் ரஜினியானார். நடத்துனராக இருந்தவர் இன்று மக்களை வழி நடத்தும் (முதல்வராக) தலைவராக வரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது அவரது பணிவு, விடாமுயற்சி போன்றவற்றிற்கு கிடைத்த பரிசு.



மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட முதல் தேர்தலில் ரஜினியின் ஆதரவுக் குரலுக்கு தமிழகத்தில் த.மா.க. போட்டியிட்ட இடத்தில் எல்லாம் சைக்கிள் ஓடியது. (அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அரசியலுக்கு வருவீங்க... வருவீங்கன்னு எதிர்பார்த்து ரசிகர்கள் நொந்துட்டாங்க சார்). அதுக்கு அடுத்து வந்த தேர்தல்களில் அவரு அடுத்தவங்களுக்கு கொடுத்த ஆதரவுக்குரலுக்கு மரியாதை இல்லாமப் போனது என்னவோ உண்மைதான்.

நல்ல மனிதரான அவர் அரசியல் சாக்கடைக்குள் வராமல் இருப்பதே நல்லது என்று நினைத்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ காலம் பதில் சொல்லும் என்று இன்னும் கூறிவருகிறார். (சந்தனம் சாக்கடைக்குள் வரவேண்டாம்... சாக்கடைக்குள்தான் வாரிசுகள் வலம் வருகின்றனவே)

அவரது நடிப்பில் பழைய படங்களான எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், பைரவி, முள்ளும் மலரும்... (இன்னும் அடுக்கலாம்.) எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள். அவருக்குள்ளும் நல்ல நடிகன் இருந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் படங்கள்.

அவரது ரசிகனாக இல்லாவிட்டாலும் அவரது பழைய படங்களை (ரொம்ப வயசானவன்னு நினைச்சுடாதீங்க... ) விரும்பிப் பார்ப்பேன். என்னை அழவைத்த படம் எங்கேயோ கேட்ட குரல் (எதாவது ஒரு சேனலில் அல்லது டிவிடியில் பார்ப்பதுதான்) . சத்தியமா முத்துராமன் அவரது உடம்பில் குண்டுகளையும், ஆயுதங்களையும் கட்டிய பிறகு வந்த படங்களை பார்ப்பதே இல்லை.

அப்புறம் இன்னொன்று, எதற்காகவும் யாருக்காகவும் பொது மேடையில் பரிந்து பேசுவதை அவர் தவிர்க்கவேண்டும். ஏனென்றால் இது புறம் கூறும் உலகம் அவர் நல்லவிதமாக பேசினாலும் திரித்து விடுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. எதற்கு வீண் வம்பு என இருக்கும் நடிகர்கள் மத்தியில் இவர் மட்டும் ஏன் தானாக முன்வந்து பிரச்சினைகளை வாங்கிக் கொள்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக நடந்த கூட்டத்தில் ரஜினி உண்மையை சொன்னதுடன் தனது சக நண்பர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டார். அதற்குமேல் அவரால் பேசமுடியவில்லை. ஆனால் அதே மேடையில் விவேக் (இரட்டை அர்த்த வேஷக்காரன்) போன்ற உத்தமர்கள் (??) பேசிய விதம் எத்தனை தமிழர்களை பாதித்திருக்கும். அது குறித்து அந்த உத்தமரைக் கூப்பிட்டு இதுவரை எதாவது சொல்லியிருப்பாரா தெரியவில்லை. எனவே எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது குறித்து ஒரு முறைக்கு நான்கு முறை நன்கு யோசித்து அதன் பிறகு அவரது கருத்துக்களை சொன்னால் நல்லது.

ரஜினி மகான் அல்ல மனிதன். அவருக்கு என்று ஒரு குடும்பம் உண்டு. அவருக்கும் ஆசாபாசங்கள் உண்டு, அவரை அவர் போக்கில் விடுங்கள். அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது இஷ்டம். அவரை அவராகவே இருக்க விடுங்கள்.

கடைசியாக ரஜினிக்கு, வயசு அறுபதாச்சு இன்னும் உங்கள் பேத்தி வயசிருக்கும் நடிகைகளுடன் டூயட் பாடுவதை நிறுத்திவிட்டு மனசுக்கு நிறைவான நல்ல கதாபாத்திரங்களில் நடியுங்கள்.

உங்கள் ரசிகர்கள் உங்களுக்காக எதையும் இழப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும் அவர்களுக்காக நீங்கள் எதையும் இழக்க வேண்டாம். அவர்களது ஆசையெல்லாம் நீங்கள் நல்ல சுகத்துடன் நீண்ட ஆயுள் இருக்கவேண்டும்... நல்ல படங்களில் நடிக்கவேண்டும் என்பதே.

உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வயதில்லை... நல்லாயிருக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்.

-சே.குமார்

7 எண்ணங்கள்:

priyamudanprabu சொன்னது…

எனக்கு ரஜினியை நடிகர் என்ற முறையில் சத்தியமாக பிடிக்காது (ரஜினி ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிப்பது கேட்கிறது.) ஆனால் அவரை மனிதாபிமானமுள்ள நல்ல மனிதர் என்ற விதத்தில் ரொம்ப பிடிக்கும்
/////
நடிப்பில் மதிக்கும் கமலை தனிப்பட்ட முறையில் அவரது நடவடிக்கைகளால் சுத்தமாக பிடிக்காது
././ஒரு






ஒரு சந்தேகம் அண்ணே

நீங்க அவங்க இருவருடனும் நெருங்கி பழகியவரா??
எப்படி சொல்லுறீங்க அவங்க தனிபட்ட வாழ்வை பற்றி இவ்வளவு உறுதியாய்???

'பரிவை' சே.குமார் சொன்னது…

அண்ணே...

முதல் வருகை. அதற்கு நன்றி.

தனி மனிதன் செய்யும் நல்லது, கெட்டது எல்லாம் வெளிச்சத்திற்கு அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். அதேபோல் பிரபலங்கள் செய்யும் எல்லாமும் ஊடகங்கள் வாயிலாக உலகமெங்கும் அறியும்படி சொல்லப்படுகின்றன. அடியேனும் படித்ததை வைத்து மனதில் பட்டதை எழுதியதுதான் இந்த கட்டுரை இதற்காக அவர்களுடன் பழக வேண்டும் என்றில்லை.
தங்களின் மனம் திறந்த கருத்துக்கு நன்றி. அதேநேரம் தங்களின் மனதை புண்படுத்தும்விதமாக இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ISR Selvakumar சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

தர்ஷன் சொன்னது…

நீங்கள் மேற்கூறிய இருவரையும் திரையில் பார்த்து ரசித்த அனுபவம் மட்டும் உண்டு. அதனடிப்படையில் அவர்களின் கலையாற்றல் நிரம்பவும் பிடிக்கும். எனினும் அவர்கள் இருவருடனும் நீங்கள் நெருங்கி பழகி இருப்பது உங்கள் பதிவிலுருந்து தெரிகிறது. கமல் தனி வாழ்வில் ஒழுங்கீனமானவர் என அறியத் தந்தமைக்கு நன்றி.

priyamudanprabu சொன்னது…

உங்களை குறைகூற வில்லை

பொதுவாக ஊடகங்கள் அவர்களின் சுய விருப்பு வெருப்புகாகவும்,வியபாரத்துககவும் எழுதும் என்பதே என் எண்ணம்

ஆத்திக பத்திரிக்கைகள் நிரம்பியுள்ள சூழலில் நாத்திகவாதம் பேசும் கமலை பத்திரிக்கைகளுக்கு பிடிகாது

மற்றும் ரசினி நிறைய திவிர ரசிகர்க்ளை கொண்ட ஒரு மசால வியாபார நடிகர் அவரை புகழ்வது மூலம் ஊடகங்கள் அவரின் ரசிகர்களை கவர்ந்து அதிக லாபம் பார்க்க முடியும்

மேலும் ஒருவரின் தனிபட்ட வாழ்வை இங்கே கவனிக்க வேண்டிய தேவை இல்லை

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congrats!

Your story titled 'மனசு: ரஜினி மகான் அல்ல நல்ல மனிதர்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th December 2009 03:00:17 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/152740
Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


தமிழிஷ் மற்றும் தமிழிஷில் வலம் வந்து எனக்கு வாக்களித்து பிரபல இடுகையாக்கிய வலை நண்பர்களுக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி செல்வகுமார்.

நன்றி தர்ஷன். ஏதோ எனது மனதில் பட்டதை எழுதினேன். அவ்வளவுதான். சினிமா தவிர்த்து பிடிக்காது என்றுதான் எழுதியிருந்தேன். அவரது நடவடிக்கைகள் பற்றி எழுத நான் யார்?
நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்த்திரையுலகை உலகமே திரும்பிபார்க்கும்படி செய்த மகா நடிகர் அவர்.

நன்றி பிரியமுடன் பிரபு. நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சரி, மோதலுடன் தொடங்கிய நம் நட்பு தொடரட்டும்.

தங்கள் அனைவருக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனி தொடர இருக்கும் நட்புக்கும் நன்றி